சாலை விதிகளை மதிப்போம் - Obey Traffic Rules
சாலை விதிகளை மதிப்போம் நண்பர்களே ! , இன்று நம் மக்கள் சமுதாயம் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று சாலை விபத்து. நாம் அன்றாடம் தொலைக்காட்சி பெட்டிகளில் கேட்கும் அன்றாட வார்த்தைகளில் ஒன்று விபத்து.. இதற்க்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீரகள். ஆம் இதற்க்கு காரணம் நம் அலட்சியமும் , அஜாக்கிரதையும் தான். மனிதன் இவ்வுலக நன்மைக்காக சமர்ப்பித்த மிக பெரிய அறிவியல் கொடை பொதுவாக இரண்டு , மூன்று , மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நாம் அதை முறையாக கையாள்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும். மனிதன் கண்டுபிடித்த வாகனங்கள் அனைத்தும் அவன் தன்னை தானே அழித்து கொள்வதற்காகத்தானோ என்று என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிடும் போலிருக்கிறது . நமக்கு பொதுவாக தெரிந்த சாலை விதிகள் , பச்சை விளக்கு ஒளிர்ந்தால் செல்ல வேண்டும் , சிகப்பு விளக்கு ஒளிர்ந்தால் நிற்க்க வேண்டும் , மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தால் சிவப்பு விளக்கு / பச்சை விளக்கு ஒளிர்வதற்காக தயார் ஆக வேண்டும் அவ்வளவு தான். அதையும் கூட நாம் ஒழுங