இன்றைய இளைய சமுதாயத்தினருக்காக
மாணவர்
சிந்தனைக்கு
என் இனிய மாணவனே !
நீ நினைத்தால் உன் வாழ்க்கையையே நீ மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஆனால்
நீதான் நினைந்து கூட பார்பதில்லையே !
திரைப்படம் பார்க்க கண்ட கண்ட இதழ்களை படிக்க, இன்னும் என்னென்னவெல்லாம் செய்ய உனக்கு நேரம்
இருக்கு. உன்னை பற்றி கொஞ்சமாவது
நினைத்துப் பார்க்க நேரம் இருக்குமா!
பரிதாபம்தான்!
உன் தலைவிதி உன் கையில். இன்றைய பொழுதை நீ எப்படி பயன்படுத்துகிறாய் எப்படி
பயன்படுத்திக்கொண்டிருக்கிறாய் என்பதை பொறுத்தே உனது புகழும் அமையும்.
இளமை பருவத்தை திரைப்பட அரங்குகளிலும் கேளிக்கை விளையாட்டுகளிலும்
வரையறையின்றி கழித்தவர்களுக்கு சரித்திரம் என்றுமே முக்கியத்துவம் கொடுத்ததில்லை
இப்படி வாழும் மனித பூச்சிகள் மாமிசப்பிண்டங்களே
உனது நேரத்தை நூலகத்தில் வீணாக்கு. நீ அறிவாளியாயாக அதைவிட்டு நீ வெளியே
வருவாய் உனது சிந்தனைகளை ஒழுக்கமென்னும் உரைக்கல்லில் அடிக்கடி தீட்டி வை, நீ ஒரு பண்புள்ள மனிதனாக சமுதாயத்தில்
மதிக்கப்படுவாய். திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், பலவீனங்களை வளர்த்துக் கொள்ளாதே. அது உன்னை பாழ்படுத்திவிடும்.
தேர் போல காரில் ஊர்வலம் வர வேண்டாமா நீ ! பேரழுகு பாவை ஒருத்தியை கை பிடித்து
பாரிஸ், ஜப்பான் என்று
தேனிலவுக்கு போக வேண்டாமா !
பாண்டியர் பரம்பரையில் வந்தவனே !
சேரனுக்கு சொந்தக்காரனே !
சோழனுக்கு சம்பந்தியே !
செந்தமிழ் மாணவனே !
ஏன் இப்படி கூனி குறுகிப் போய் கிடக்கிறாய்.! என்னால் இது எல்லாம் எப்படி முடியும்
என்று உன்னைப்போலவே லால் பகதூர் சாஸ்திரி கேட்டிருந்தரானால் படகுக்கு காசில்லாமல்
கங்கையைக் கடந்து நீந்தியே பள்ளிக்கு சென்று படித்து பட்டம் வாங்கியிருக்க
முடியாது. அதே நேரத்தில் பாரத
பிரதமராகவும் உயர்ந்திருக்க முடியாது.
முடவன் தான் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது. நீ முடவனாக இல்லையே
மூலையுள்ளவனாயிற்றேயப்பா.
வண்டியிழுத்த ஒரு எழுத்தாளர் இன்று பெரிய மனிதராக பைப் பிடிக்கும்போது,
படித்து பட்டம்
பெறப்போகும் நீ பெரும்புகழ் பெற வேண்டாமா !
வாயுள்ள பிள்ளை பிழைக்கும், நீ திறமையுள்ள
மாணவன், நீ பிழைக்க வேண்டாமா
உனது நேரத்தை அலாவுதீனின் அற்புத விளக்கு மாதிரி பயன்படுத்திக்கொள்
ஷேக்ஸ்பியரை நண்பனாக்கி கொள்
மில்டனை புரிந்து கொள்
அவ்வையாரை சைட் அடி
கம்பனைக்
காதலி
பாரதிதாசனை தெரிந்து கொள்
பாரதியாரை பிழிந்தெடு
மூன்று மணி நேரம் மட்டமான திரைப்படங்களை பார்த்து, மனதையும், உடலையும் பாதிக்க படுவதை விட தினம் ஒரு மணி
நேரமாவது உலக மகா அறிவாளிகளோடு பேசி கொண்டிரு (நூல்களின் வாயிலாக)
நீ நினைத்தால் சொறி பிடித்த பாதையோர பிச்சைக்காரனாகவும் ஆக முடியும். நீயே நினைத்தால் மாடமாளிகையின் அதிபதியாகவும்
ஆக முடியும். உனது பெயரை, உனது பேரன்கள் சரித்திரத்தில் தெரிந்து
கொள்ளட்டும்.
நன்றி
இந்த பதிவு தினமணி நாளிழத்தில் எப்பொழுதோ வெளிவந்ததாக அறிந்து இளையவர்களுக்காக பகிர்கின்றேன்
Wow you really enlightened me.. hats off u
ReplyDeleteThank you..
Delete