சாலை விதிகளை மதிப்போம் - Obey Traffic Rules
சாலை விதிகளை மதிப்போம்
நண்பர்களே !,
இன்று நம் மக்கள் சமுதாயம் சந்தித்து வரும்
பிரச்சினைகளில் ஒன்று சாலை விபத்து. நாம் அன்றாடம் தொலைக்காட்சி பெட்டிகளில்
கேட்கும் அன்றாட வார்த்தைகளில் ஒன்று விபத்து.. இதற்க்கு காரணம் என்னவாக இருக்க
முடியும் என்று நினைக்கிறீரகள். ஆம் இதற்க்கு காரணம் நம் அலட்சியமும், அஜாக்கிரதையும் தான்.
மனிதன் இவ்வுலக நன்மைக்காக சமர்ப்பித்த மிக பெரிய அறிவியல் கொடை பொதுவாக
இரண்டு, மூன்று, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள். நாம் அதை
முறையாக கையாள்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும்.
மனிதன் கண்டுபிடித்த வாகனங்கள் அனைத்தும் அவன்
தன்னை தானே அழித்து கொள்வதற்காகத்தானோ என்று என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிடும்
போலிருக்கிறது.
நமக்கு பொதுவாக தெரிந்த சாலை விதிகள், பச்சை விளக்கு ஒளிர்ந்தால் செல்ல வேண்டும்,
சிகப்பு விளக்கு ஒளிர்ந்தால்
நிற்க்க வேண்டும், மஞ்சள் விளக்கு
ஒளிர்ந்தால் சிவப்பு விளக்கு / பச்சை விளக்கு ஒளிர்வதற்காக தயார் ஆக வேண்டும்
அவ்வளவு தான். அதையும் கூட நாம் ஒழுங்காக பின்பற்றுவதில்லை என்பதுதான் நிதர்சனமான
உண்மை.
நான் பிறரிடம் ஆலோசித்து நாம் பின்பற்றவேண்டிய
ஒரு சில விதிகளை கீழே தந்துள்ளேன்.
சிறுவர்களை வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.
சாலை காலியாகவே இருந்தாலும் சிக்னல்களை முறையாக
பின்பற்றுங்கள்.
வாகனங்களை முந்தி செல்லும் பொழுது முன் பக்கம்
வண்டி ஓட்டுபவர் பதறாத வண்ணம் முந்த வேண்டும்.
புதிதாக வாங்கிய வண்டியில் உள்ள பின் பக்கம்
பார்க்கும் கண்ணாடியை கழற்றி வைக்கும் பழக்கத்தினை விடவேண்டும்.
வண்டியில் உள்ள முன்பக்க விளக்கை மாலை 6
மணி ஆனவுடன் கட்டாயமாக
எரிய விட வேண்டும். இது நீங்கள் முன்பக்கம் இருட்டில் கவனித்து ஓட்டுவதற்காக
மட்டும் அல்ல உங்கள் எதிரில் வருபவர்களுக்கு நீங்கள் வந்து கொண்டு இருக்கிறீர்கள்
என்று தெரிய வைக்கவும் தான்.
போக்குவரத்து நெரிசலில் தேவை இல்லாமல் ஹார்ன்
அடித்து அடுத்தவர்களுக்கு எரிச்சலூட்டாதீர்கள்.
இரவு நேரத்தில் கையினால் சைகை செய்வதை
தவிர்த்திடுங்கள். தவறாமல் இண்டிகேட்டரை 10 மீட்டருக்கு முன்பாகவே பயன்படுத்துங்கள்.
சாலையை குறுக்கே கடக்கும் பொழுது இருபுறமும்
கவனித்து கடந்து செல்லுங்கள்.
வயதானவர்களை அழைத்து செல்லும்பொழுது மிதமான
வேகத்தை கடைபிடியுங்கள்.
ரெயில்வே கேட் மூடியிருந்தால் தயவு செய்து
வண்டியை அணைத்து விட்டு கேட் திறக்கும் வரை காத்திருங்கள். ரெயிலின் வேகத்தை உங்களால்
கணிக்க இயலாது.
புகை பிடித்து கொண்டோ அல்லது கைபேசியை
உபயோகித்து கொண்டோ வாகனத்தை இயக்கத்தீர்கள்.
உங்கள் உயிர் உங்களிடமும் அடுத்தவர்கள் உயிரும்
உங்களிடம் தான் உள்ளது என்பதை வாகனத்தை இயக்கம்போது மறவாதீர்.
இதில் ஏதேனும் இரண்டை நீங்கள் கடை பிடிக்க
ஆரம்பித்தாலும் மற்றவைகள் தானாகவே உங்களுக்கு வந்துவிடும்.
இந்த பதிவை மேலும் மெருகேற்ற நான் ஏதேனும்
சொல்லாமல் விட்டிருந்தால் தயவு செய்து ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ கமெண்ட்
செய்யவும்.
Comments
Post a Comment